×

நீர் சேமிப்பு என்பது ஒரு முயற்சி நீர், இயற்கை பாதுகாப்பு என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி: பிரதமர் மோடி கருத்து

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த “தண்ணீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு” திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியர்கள் தண்ணீரை கடவுளின் வடிவமாகவும், நதிகளை தெய்வங்களாகவும், நீர்நிலைகளை கடவுளின் வசிப்பிடங்களாகவும் கருதும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். தண்ணீர் சேமிப்பு என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல. அது ஒரு முயற்சி, நல்லொழுக்கம், சமூக அர்ப்பணிப்பு. நம் எதிர்கால சந்ததியினர் நம்மை மதிப்பீடு செய்யும் ஒரு கருவியாக தண்ணீர் இருக்கும்.

உலகில் உள்ள நன்னீர் வளத்தில் இந்தியாவில் வெறும் 4 சதவீதம் மட்டுமே உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகள் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. தண்ணீர் என்பது ஒரு வளம் மட்டுமல்ல. வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சார்ந்தது. தண்ணீரின் எதிர்காலத்தை பாதுகாக்க குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் என்ற செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் நீர் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒருபகுதி” என்று இவ்வாறு தெரிவித்தார்.

 

The post நீர் சேமிப்பு என்பது ஒரு முயற்சி நீர், இயற்கை பாதுகாப்பு என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி: பிரதமர் மோடி கருத்து appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Surat ,Modi ,Surat, Gujarat ,Indians ,God ,
× RELATED பிரதமர் மோடி மிலாடி நபி வாழ்த்து!!