×

குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாட்டில் குழந்தை திருமணங்கள் குறைந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்!!

டெல்லி : நாட்டில் அதிகரித்து வருவது தொடர்பான பொதுநல வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குழந்தை திருமணம் தொடர்பான சட்டத்தை சில மாநிலங்கள் முறையாக கடைப்பிடிக்காததால் நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. குஜராத், தமிழ்நாடு உட்பட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. இதற்கு நீதிபதிகள், “குழந்தை திருமணங்களை தடுக்க எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது வழக்கமாக செய்வதுதான். ஆனால், குழந்தைகள் திருமணத்தை தடுக்க இது சமூக அடிமட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறினர். இதற்கு பதிலளித்த ஒன்றிய “விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன” என்று கூறினார். அப்போது, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

The post குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாட்டில் குழந்தை திருமணங்கள் குறைந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்!! appeared first on Dinakaran.

Tags : EU GOVERNMENT ,GUJARAT ,TAMIL NADU ,Delhi ,Supreme Court ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்...