- மயிலாடுதுறை
- உதவி ஆய்வாளர்
- கண்ணன்
- பெரம்பூர் காவல் நிலையம்
- மேலகடடி
- திருவாவடுதுறை மெயின் ரோடு, குத்தாலம் தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம்
- எஸ்ஐ
- ஜானகி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின்ரோடு மேலக்கடை பகுதியில் பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2ம்தேதி எஸ்ஐ கண்ணனின் மனைவி ஜானகி வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது டூ வீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் ஜானகியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மயிலாடுதுறை தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த வசந்த், அதே பகுதியில் நீடாமங்கலம் சாலையில் வசிக்கும் சிவா ஆகியோர் செயின் பறித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் நடத்திய விசாரணையில், வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதும், விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய சிவாவுடன் சேர்ந்து வழிபறியில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தில் மது அருந்துவது, சூதாட்டத்தில் ஈடுபட்டு ராஜபோகமாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
The post எஸ்ஐ மனைவியிடம் செயின் பறித்த ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.