×
Saravana Stores

செம்பனார்கோயில் அருகே சர்க்கரை கரும்பு சாகுபடி பணி

*விவசாயிகள் மும்முரம்

செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து பயறு, நிலக்கடலை, வாழை, காய்கறிகள், கரும்பு உள்ளிட்டவைகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர், கூடலூர் பகுதியில் சர்க்கரை கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு தற்போது விளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்க்கரை கரும்பு சாகுபடி விவசாயிகள் கூறுகையில், இங்கு சாகுபடி செய்யப்படும் சர்க்கரை கரும்பை, பெரும்பாலும் கரும்பு ஜூஸ் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் பல்வேறு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கும் எடுத்து செல்கிறோம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்க்கரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டோம். தற்போது விளைச்சல் ஏற்பட்டுள்ளது. மணல்மேட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பதால் இந்த பகுதியில் சர்க்கரை கரும்பின் சாகுபடி குறைவாக உள்ளது.

சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் முன்பு போல் பெரும்பாலான விவசாயிகள் சர்க்கரை கரும்பு சாகுபடி செய்வதில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சர்க்கரை கரும்பு சாகுபடி அதிகரிப்பதுடன் ஏராளமான விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்று கூறினர்.

The post செம்பனார்கோயில் அருகே சர்க்கரை கரும்பு சாகுபடி பணி appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai district ,Memathur ,Kudalur ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.63 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி