×

இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பதே அரசின் நோக்கம்: கார்கே விமர்சனம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பது மட்டும் தான் பிரதமர் மோடி அரசின் நோக்கமாகும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்தற்கு மோடி அரசுதான் முழுப்பொறுப்பு என்பது உண்மையாகும். தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆண்டு கணக்கெடுப்பின்படி உற்பத்தி துறையில் 2015-2023ம் ஆண்டு வரையிலான சுமார் 7 ஆண்டுகளில் 54லட்சம் பணிகள் பறிபோயுள்ளன.

2010-2011ம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கப்படாத விவசாயம் சாராத நிறுவனங்களில் 10.8கோடி பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுவே 2022-2023ம் ஆண்டில் 10.96கோடியாக உள்ளது. 12 ஆண்டுகளில் 16லட்சம் வேலைவாய்ப்புக்கள் மட்டுமே அதிகரித்துள்ளது. பிஎல்எப்எஸ் அறிக்கையின்படி, நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.7சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசானது இபிஎப்ஓ தரவுகளை காட்டுவதன் மூலமாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக வெளிக்காட்டிக்கொள்கிறது.

ஆனால் கடந்தாண்டில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் விகிதமானது 10சதவீதம் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லக்னோ ஐஎம்எம் அறிக்கையில் படித்தவர்களிடையே அதிக வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர்களின் பெண்களின் பங்கேற்பு குறைவு உள்ளிட்ட அதிகமாக இருக்கிறது.சிஎம்ஐஇ கருத்துப்படி, நாட்டில் தற்போதைய வேலையின்மை விகிதம் 9.2சதவீதத்தை எட்டியுள்ளது. இது பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை 18.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

The post இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பதே அரசின் நோக்கம்: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Congress ,Kharge ,Modi government ,Mallikarjuna Kharge ,
× RELATED பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில்...