×

கோயில் நன்கொடை நிதியை செலவிட முறைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளதா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் என்ற அமைப்பு தரப்பில் ஒரு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி,” தமிழ்நாட்டில் கோவில்களுக்கு வரும் உண்டியல் காசு உள்ளிட்ட நன்கொடை நிதியை செலவிடுவதை முறைப்படுத்த திட்டம் உள்ளதா? கோவில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப் படுகிறது?

அந்த நிதி கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த நிதி சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் அது தவறானதாகும். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. முதலில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கட்டும். பின்னர் இதுகுறித்து விரிவாக விவாதிக்கலாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post கோயில் நன்கொடை நிதியை செலவிட முறைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளதா?: உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Yayalam Kappom ,Justice ,Suryakant ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...