×
Saravana Stores

நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூலை 8: தளி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் தலைமையிலான போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு ஏற்படும் விதமாகவும், நடுரோட்டில் வாலிபர் ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சூடசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Thali Police ,Sub-Inspector ,Mohanasundaram ,Regional Development Office ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்