×

சிறையில் இருந்து பரோலில் வந்த அம்ரித்பால் சிங், அப்துல் ரஷீத் எம்பியாக பதவியேற்பு

புதுடெல்லி: சிறையில் இருந்து பரோலில் வந்த அம்ரித் பால், பொறியாளர் அப்துல் ரஷீத் ஆகியோர் நேற்று எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர். காலீஸ்தான் ஆதரவாளர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் தே கட்சி தலைவரான அம்ரித் பால் சிங், போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்ருகர் சிறையில்உள்ள இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபின் காதூர் ஷாகிப் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் சுமார் 1.97லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ரித்பால் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

எம்பியாக பதவியேற்பதற்காக அவருக்கு 4 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை திப்ருகர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலமாகசென்றார். இதேபோல் தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருக்கும் காஷ்மீரை சேர்ந்த ஷேக் அப்துல் ரஷீத் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் நேற்று பதவியேற்பதற்காக 2 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்த இருவருக்கும் மக்களவை சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post சிறையில் இருந்து பரோலில் வந்த அம்ரித்பால் சிங், அப்துல் ரஷீத் எம்பியாக பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Amritpal Singh ,Abdul Rasheed ,New Delhi ,Amrit Paul ,Waris Punjab Te Party ,Amrit Pal Singh ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...