×

மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு கொடுத்த உணவில் பாம்பு

சாங்கிலி: மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு தரப்பட்ட உணவில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே(சிவசேனா), அஜித் பவார்(தேசியவாத காங்கிரஸ்) மற்றும் பாஜ அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசால் நடத்தப்படும் அங்கன்வாடி பள்ளிகளில் மதிய உணவுத்திட்டடத்தின்கீழ் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பருப்பு கிச்சடி, சாதம் அடங்கிய உணவு பொட்டலங்கள் தரப்படுகின்றன.

இந்நிலையில் சாங்கிலி மாவட்டம் பலூஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல் குழந்தைகளுக்கு மதிய உணவு பொட்டலங்கள் தரப்பட்டன. அப்போது ஒரு குழந்தைக்கு தரப்பட்ட பொட்டலத்தில் இறந்த நிலையில் சிறிய பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அதை புகைப்படம் எடுத்து உள்ளூர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை எழுப்பி உள்ளது.

The post மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு கொடுத்த உணவில் பாம்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Maharashtra ,Mahayudi ,Eknath Shinde ,Shiva Sena ,Ajit Pawar ,Nationalist Congress ,BJP ,
× RELATED மாவட்ட திட்ட அலுவலகத்தை...