×

போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும்

*டிஎஸ்பி விஜயலட்சுமி பேச்சு

மஞ்சூர் : போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என ஊட்டி ரூரல் டிஎஸ்பி விஜயலட்சுமி தெரிவித்தார்.தமிழ்நாட்டில், கஞ்சா, பான்பராக், பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.மேலும், போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களின் அருகே போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இநிலையில், மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் சாம்ராஜ் சிவசைலம் மேல் நிலைப்பள்ளியில் நேற்று போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊட்டி ரூரல் டிஎஸ்பி விஜயலட்சுமி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசியதாவது, பெரும்பாலும் போதைக்கு அடிமையானர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செய்களிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருட்களால் அதை பயன்படுத்வோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமுதாயம், கலாச்சர சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல் படி போதை பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என தெரிவித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் மஞ்சூர் எஸ்ஐ சவுந்திரராஜன் நன்றி கூறினார்.

The post போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : DSP ,Vijayalakshmi ,Manjoor ,Tamil Nadu ,
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...