×

தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: 11ம் தேதிக்கு பிறகு வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

நேற்று மாலையில் ஈரோடு, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், அரியலூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்தது. அதேபோல வட மாவட்டங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நேற்று மாலை 7 மணிக்கு பிறகு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதை அடுத்து, 11ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம், புதுவையில் 11ம் தேதிக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நாளை (9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை குமரிக் கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: 11ம் தேதிக்கு பிறகு வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,South India ,Nilgiris ,Coimbatore ,Tirupur ,Erode ,Dharmapuri ,Krishnagiri ,Tirupattur ,Villupuram ,
× RELATED வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு...