×

கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி துவங்கியது: அழுகாமல் இருக்க கொடிகட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் கோடை மழையையொட்டி சில கிராமங்களில் தக்காளி கீழே விழுந்து அழுகாமல் இருக்க கொடிக்கட்டும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி மற்றும் காய்கறிகளே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு பிறகு தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. அதில் நல்ல விளைச்சலடைந்த தக்காளிகளின் அறுவடை டிசம்பர் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது.

அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கத்தால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்தனர்.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி பல கிராமங்களில், விவசாயிகள் தக்காளி சாகுபடியை மீண்டும் துவங்கியுள்ளனர். இருப்பினும், சில இடங்களில் மழை பெய்யும் போது செடி கீழே சாயாமல் இருக்கவும், தக்காளியை காத்து கொள்ளவும் கொடி அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதில் பெரும்பாலும் வடக்கிபாளையம், பொன்னாபுரம், சூலக்கல், நடுப்புணி பகுதியில் உள்ள விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கொடிக்கட்டுவதன் மூலம், பலத்த மழை மற்றும் காற்றுக்கு செடிகள் சாயாமல் இருப்பதுடன் தக்காளி அதிகளவு விளைந்தால் அவை கீழே விழுவது தவிர்க்க ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி துவங்கியது: அழுகாமல் இருக்க கொடிகட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Vadakipalayam ,Dinakaran ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...