×

ரேஷனில் பருப்பு, எண்ணெய் விநியோகம் ஞாயிற்றுக்கிழமையும் பெறலாம்

 

திருச்சி, மே 27: திருச்சி மாவட்டத்தில் வழக்கமாக பொது விநியோக திட்டத்திற்கு வந்து சேரும் அத்தியாவசிய பொருட்களில் இந்த மாதம் மே.1ம் தேதிக்கு வர வேண்டிய பொருட்கள் தாமதமாகி உள்ளது. பருப்பு மற்றும் எண்ணெய் இரண்டு பொருட்களும் டெண்டர் விட்ட நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நேரத்திற்கு வந்து சேராமல் காலதாமதம் ஆனதால், இந்த மாதத்திற்கு வந்து சேர்ந்த பருப்பு மற்றும் எண்ணெய்யை திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வௌ்ளிக்கிழமைகள் நியாயவிலை கடைகளுக்கு வழக்கமாக விடுமுறை உள்ளது. அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுகிழமை வேலை நாட்களாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக இம்மாதம் வந்து சேர்ந்த பருப்பு மற்றும் எண்ணெணையை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் விதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக திருச்சி மாவட்ட நியாயவிலை கடைகளுக்கு அறிவிக்கப்பட்டு, பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அறிவித்துள்ளனர்.

 

The post ரேஷனில் பருப்பு, எண்ணெய் விநியோகம் ஞாயிற்றுக்கிழமையும் பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy district ,
× RELATED ஒரு நாள் கலெக்டர் ஆகணுமா? இதை பண்ணுங்க… மாணவர்களுக்கு லக்கி சான்ஸ்