- தேவிரால்லி அரசு பள்ளி
- போச்சம்பள்ளி
- காவேரிப்பட்டினம் ஒன்றியம்
- தேவிராள்ளி அரசு உயர் செகண்டரி பள்ளி
- தின மலர்
போச்சம்பள்ளி, மே 11: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தேவீரஅள்ளி அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது. காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவீரஅள்ளி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பவித்ரா 465 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் மோதீஸ் 464 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாணவன் அன்பரசு கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர்கள் அனைவரும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து 6வது ஆண்டாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் முத்து மற்றும் ஆசிரியர்களை, பெற்றோர்கள் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.
The post தேவீரஅள்ளி அரசு பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.