×
Saravana Stores

காஞ்சிபுரம் விஷார் கிராமத்தில் அகத்தியர் மகரிஷி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

காஞ்சிபுரம்: கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் அருகே விஷார் கிராமத்தில், அகத்திய ஜீவ அருட்குடில் என்ற அமைப்பின் மூலம், ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதியதாக கோயில் கட்டப்பட்டு, அதன் அருகிலேயே பசுமடம், அன்னதானம் கூடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 16 அடி அகலமும், 33 அடி உயரமும் கொண்ட இக்கோயில் முழுவதும் கருங்கற்களால், அழகிய வேலைபாடுகளுடன் 18 சித்தர்களின் உருவங்களோடு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் வகையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

அகத்தியர் மகரிஷிக்கு தனி கோயிலாக கட்டியுள்ள இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா கடந்த 3ம்தேதியான வெள்ளிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து, 2வது நாளாக புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும், மகா பூரணாஹதி தீபாராதனையும் நடந்தது. விழாவின் 3வது நாளான யாகசாலை பூஜைகளும், மகா பூரணாஹதி தீபாராதனையும் நிறைவு பெற்று, யாகசாலைகள் அமைக்கப்பட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஏழு புண்ணிய நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு 151 கலசங்கள் வைத்து, 5யாக குண்டங்களில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, யாகசாலையில் பூரணஹதி முடித்து, புனிதநீர் கலசங்கள் மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டுவந்து, வேத மந்திரங்கள் ஓதி, சிறப்பு பூஜைகள் செய்து, அகத்தியர் மகரிஷி கோயில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை அகத்தியர் ஜீவ அருட்டில் அமைப்பின் தலைவர் வி.எஸ்.குமரவேல், பொருளாளர் மா.ரெத்தினக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post காஞ்சிபுரம் விஷார் கிராமத்தில் அகத்தியர் மகரிஷி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Agathiyar Maharishi Temple ,Kanchipuram Vishar Village ,Kanchipuram ,Vishar village ,Sri Lopamudra Sametha ,Agathiyar Maharishi ,Agathiya Jiva Aruthkudil ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து: 28 பேர் படுகாயம்