×
Saravana Stores

மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

மேட்டூர், மே 6: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து முற்றிலும் சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், கடந்த 5 நாட்களாக நீர்வரத்து 200 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 50 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 61 கனஅடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 52.70 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 52.50 அடியானது. நீர் இருப்பு 19.42 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Cauvery ,Okanagan ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது