கடத்தூர், மே 6: கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை நீர் கலப்பதால், மீன்கள் செத்து மிதந்தது. கடத்தூர் ஏரிக்கு பொதியம்பள்ளம் அணைக்கட்டு பகுதியில் இருந்து, நல்லகுட்லஅள்ளி ஏரிக்கு வரும் தண்ணீர் நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கடத்தூர் ஏரிக்கு வரும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் வரும் கால்வாய் பகுதிகள், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில், கடத்தூர் ஏரிக்கு தண்ணீர் வருவது நின்றது. இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், ஏரியில் கலந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்த லட்சக்கணக்கான மீன்களில், ஆயிரக்கணக்கில் நேற்று செத்து மிதந்தன. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால், மீன்கள் செத்து மடியும் பரிதாப நிலை உருவாகியுள்ளது.
எனவே, ஏரியில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
The post ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.