- ஓமலூர் பெரியமாரியம்மன்
- ஓமலூர்
- பெரிய மாரியம்மன்
- சின்ன மாரியம்மன்
- திரௌபதி அம்மன்
- சித்ராய் திருவிழா
- விநாயகர்
- சரபங்கா நதி
- பூச்சாத்
ஓமலூர், ஏப்.25: ஓமலூர் நகரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளது. இந்நிலையில், இந்த கோயில்களில் சித்திரை திருவிழா, நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சரபங்கா நதிக்கரையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெரிய மாரியம்மன் கோயிலில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, அம்மனுக்கு பூக்களை கொட்டி வழிபாடு செய்தனர். இரவு திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஓமலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post ஓமலூர் பெரியமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா appeared first on Dinakaran.