- அஇஅதிமுக
- கார்த்திகேயன்
- பொள்ளாச்சி
- திமுக
- கே.ஈஸ்வரசாமி
- கோயம்புத்தூர்
- சிங்கை ராமச்சந்திரன்
- சூலூர்
- Dudiyalur
- கௌந்தம்பாளையம்
- தின மலர்
கோவை, ஏப்.18: கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், நேற்று காலை 7 மணியளவில் சூலூர் தொகுதியில் தனது பிரசாரத்தை துவங்கினார்.
தொடர்ந்து கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம், கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர், வடவள்ளி பேருந்து நிலையம், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம், ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் பிரசாரம் செய்தார். சிங்காநல்லூர் தொகுதி செல்லாண்டி அம்மன் கோயில் கரும்புக்கடை திடலில் தனது பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
இந்த இறுதிகட்ட பிரசாரத்தின் போது சிங்கை ராமச்சந்திரன் பொதுமக்களிடம் பேசியதாவது:
பாஜ ஒரு மதவாத இயக்கம். எந்த இடத்தில் மக்களை பிரித்து ஒரு கட்சி வளர்கிறதோ அந்த கட்சி நாட்டிற்கு அழிவை மட்டுமே கொடுக்கும். ஊழல் பற்றி பேச பாஜவுக்கு தகுதி இல்லை. பாஜ தமிழ்நாட்டிற்கு தேவை கிடையாது. இதனை தமிழக மக்கள் முடிவு செய்ததால் தமிழ்நாட்டில் பாஜ வளரவில்லை. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு வெற்றி பெற வாய்ப்பு அளிக்க வேண்டும். அதிமுக மக்களுக்கான இயக்கம். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே அர்ஜூனன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இறுதிக்கட்ட தீவிர பிரசாரம்: திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.