காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ.6.64 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில், 6 மாதங்களுக்கு பிறகு 4 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டன.
இதில், கோயில் செயல் அலுவலர் நடராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 6 லட்சத்து 64 ஆயிரத்து 120 ரூபாயும், 7 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி 310 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
The post காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.64 லட்சம் வசூல் appeared first on Dinakaran.