×

குண்டுமல்லி கிலோ ₹250ஆக சரிவு

 

சேலம், மார்ச் 12: சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லை பூ, ஜாதிமல்லி, காக்கட்டான், கலர் காக்கட்டான், மலை காக்கட்டான், சம்பங்கி, சாதா சம்பங்கி, அரளி, நந்தியாவட்டம், ரோஸ், கனகாம்பரம், சாமந்தி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட், சென்னை, பெங்களூருக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது கோயில் திருவிழா மற்றும் முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதன் கடந்த வாரத்தைவிட நடப்பு வாரத்தில் பூக்களின் விலை சரிந்துள்ளது. நேற்று நிலவரப்படி குண்டுமல்லி கிலோ ₹250ஆக சரிந்தது. முல்லை பூ ₹250, ஜாதிமல்லி ₹250, காக்கட்டான் ₹160, கலர் காக்கட்டான் ₹160, மலை காக்கட்டான் ₹120, சம்பங்கி ₹80, சாதா சம்பங்கி ₹150, அரளி ₹100, வெள்ைள அரளி ₹100, மஞ்சள் அரளி ₹100, செவ்வரளி ₹200, நந்தியாவட்டம் ₹20, என விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post குண்டுமல்லி கிலோ ₹250ஆக சரிவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...