×

140 மூட்டை கொப்பரை ₹5.25 லட்சத்திற்கு ஏலம்

இடைப்பாடி, ஏப்.27: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மொத்தம் 140 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு ₹84.25 பைசா முதல் ₹97.35 பைசா வரையும், 2ம் தரம் ₹68.75 பைசா முதல் ₹78.75 பைசா வரை ஏலம் போனது. இதில் மொத்தம் 140 மூட்டை கொப்பரை ₹5.25 லட்சத்திற்கு ஏலம் போனது. இன்று 27ம் தேதி சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 140 மூட்டை கொப்பரை ₹5.25 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Eadpadi ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Society ,Konganapuram ,Salem ,Namakkal ,Dharmapuri ,Krishnagiri ,Erode ,
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை