×

₹7 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஓமலூர், ஏப்.28: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 72 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 7243 கிலோ கொப்பரையை, 30 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ₹7 லட்சத்து 5018க்கு ஏலம் எடுத்தனர். கொப்பரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நேற்றைய ஏலத்தில் கிலோ 100ஐ கடந்து விற்பனையானது. கிலோவிற்கு ₹4.60 காசுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 95.69 காசுக்கு விற்பனையான கொப்பரை, நேற்று ₹101.09க்கும், குறைந்தபட்ச விலையில் கடந்த வாரம் ₹70.08 காசுக்கு விற்பனையான கொப்பரை, ₹68.88க்கும் விற்பனையானது. சராசரி விலையில் கடந்த வாரம் ₹92.99க்கு விற்பனையான கொப்பரை நேற்று ₹97.99க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ₹7 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Regulation Hall ,Dinakaran ,
× RELATED ஓமலூரில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்..!!