×

அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்

சேலம், ஏப்.26: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, அதனை கண்டித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் அம்பேத்கர், 19 பெண்கள் உள்பட 25 பேர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று, 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜங்ஷன் அண்ணாதுரை உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

The post அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : AMA ,president ,Salem ,Salem Collector ,Ambedkar People's ,Movement ,Chief Minister ,Edappadi Palaniswami ,Ambedkar ,Dinakaran ,
× RELATED வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள்...