சேலம், மார்ச் 8: திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குரதவீதியை சேர்ந்தவர் கிஷோர் (28). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5ம் தேதி சேலத்தில் உள்ள உறவினர் சிவக்குமார் என்பவரது வீட்டிற்கு கிஷோர் வந்திருந்தார். பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் பெங்களூருக்கு செல்ல சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில் ஏறி லக்கேஜ் வைத்திருக்கும் இடத்தில் தனது லேப்டாப் பேக்கை வைத்துவிட்டு, கீழே இறங்கி உறவினர் சிவக்குமாருடன் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அந்த பஸ்சில் ஏறிய 2 பேர், கிஷோரின் லேப்டாப்பை திருடிக்கொண்டு கீழே இறங்கினர். அதனை பார்த்த கிஷோர், சிவக்குமார் ஆகியோர் அங்கிருந்த இதர பயணிகள் உதவியுடன் லேப்டாப் திருடிய 2 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் அவர்கள், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த கண்ணன் (52), ஆண்டி (எ) ஆண்டிமுத்து (43) எனத்தெரியவந்தது. இருவர் மீதும் திருட்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
The post லேப்டாப் திருடிய 2 பேரை மடக்கிப் பிடித்து தர்மஅடி appeared first on Dinakaran.