×
Saravana Stores

திமுகவினர் திண்ணை பிரசாரம்

வாழப்பாடி: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், வீடு வீடாக சென்று இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பின் கீழ், திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் சோலை கோவிந்தன், நிர்வாகிகள் சேட்டு, மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர் பழனிசாமி, புழுதிகுட்டை ஊராட்சி தலைவர் அறிவழகன், குறிச்சி ஜெயபிரகாஷ், அத்தனூர்பட்டி ஊராட்சி தலைவர் பாரதி, மகேஷ், செந்தில்குமார், ஆனந்தன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுகவினர் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vazhappadi ,Northern Union ,Chakraborty ,Chief General Committee ,MLA Tamilchelvan ,Stalin ,Dravida ,Dinakaran ,
× RELATED அதிமுக செயல்வீரர் கூட்டம்