- கைத்தறி நெசவாளர்கள்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டமைப்பின் 13வது மாநில மாநாடு
- AIDUC
- காஞ்சிபுரம் சன்னஒளி பெருமாள் கோவில் தெரு
- ஜனாதிபதி
- ஜி.மணி மூர்த்தி
- காமாச்சி அம்மன் பாட்டு...
- கைத்தறி நெசவாளர் மாநில மாநாடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளர் சம்மேளனம் ஏஐடியூசி பிரிவின் 13வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி.மணி மூர்த்தி தலைமை வகித்தார். காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஸ்டாலின் சங்க கொடியை ஏற்றினார். சங்க நிர்வாகிகள் தாமோதரன், வேலுச்சாமி, சங்கர், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநிலச் செயலாளர் ராதா வேலை அறிக்கை வாசித்தார். தேசியச் செயலாளர் மூர்த்தி மாநாட்டினை தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ராஜன், செயலாளர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், காஞ்சி தொகுதி செயலாளர் கமலநாதன், தேசியக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் தில்லைவனம் ஆகியோர் பேசினர்.
கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மாத ஒய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவில் புதிய நிர்வாகக் குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
The post காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் மாநில மாநாடு appeared first on Dinakaran.