ஆட்டையாம்பட்டி: சேலம் அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, பாரம்பரிய நாட்டு மாட்டுச்சந்தை கூடியது. தமிழகத்தில் கிராமங்களில் உள்ள கோயில் திருவிழாக்களின் போது, குதிரை சந்தை, மாட்டுச்சந்தை மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் உள்ள கந்தசாமி கோயிலில், தைப்பூச தேர்த் திருவிழாவையொட்டி நாட்டு மாட்டுச்சந்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து நாட்டுப்பசு மாடுகள், நாட்டு காளை மாடுகள், வண்டி மாடுகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
The post களை கட்டியது மாட்டுச்சந்தை appeared first on Dinakaran.