×

மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.21: விசிக தலைவர் திருமாவளவன் உட்பட மக்களவையில் 95 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்கள் என இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட கிழக்கு மாவட்ட சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி-கரூர் மண்டல பொறுப்பாளர் தமிழாதன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் பாசறை மாநில நிர்வாகி அரசு, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில நிர்வாகி காட்டூர் புரோஸ்கான், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, பகுதி செயலாளர்கள் ஞானம், ஆல்பர்ட்ராஜ், ஆல்பர்ட் ஹென்றி பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் சஸ்பெண்ட் திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Rajya Sabha M.P.s ,Vishika ,Trichy ,Thirumavalavan ,Rajya Sabha ,MPs ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய...