×

பெரம்பலூர், அரியலூர் கலெக்டர் தகவல் 20ம்ஆண்டு நினைவு தினம் முரசொலிமாறன் உருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை

 

பெரம்பலூர், நவ.24: பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன் தலைமையில், எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், பட்டுசெல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல் ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், ஜெகதீசன், ராஜேந்திரன், பேரூர் செயலாளர் வெங்கடேசன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர், அரியலூர் கலெக்டர் தகவல் 20ம்ஆண்டு நினைவு தினம் முரசொலிமாறன் உருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,ARIYALUR COLLECTOR INFORMATION ,ANNIVERSARY MEMORIAL DAY ,MURASOLIMARAN ,DIMUGWINAR MALARDUVI ,DISTRICT ,FORMER UNION ,MINISTER ,MURASOLI ,MARAN ,Ariyalur ,Anniversary ,Memorial Day ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல்...