×
Saravana Stores

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊரல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் கல்லடையான் கோயில் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இன்று மருவத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு எஸ்எஸ்ஐ. கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஐ.சங்கர் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மதியழகன் மகன் வேல்முருகன் (27).பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மது பாட்டில்கள் விற்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை மருவத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 12 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Filmisai village ,Perambalur district ,Batalur ,Perambalur District SP ,Shyamla Devi ,PERAMBALUR DISTRICT ALATHUR ,
× RELATED பெரம்பலூர் அருகே விரட்டி கடித்த...