×

கருவில் இருக்கும் சிசு பாலினம் கண்டறிய பெரம்பலூருக்கு அழைத்து வரப்பட்ட 5 கர்ப்பிணிகள்

 

பெரம்பலூர், ஜூலை 26: கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா கண்டறிய பெரம்பலூர் மாவட்டத்திற்கு 5 கர்ப்பிணிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களை பரிசோதிக்கும் போது போலி பரிசோதகர் சிக்கினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருவில் இருக்கும் சிசுவை ஆணா பெண்ணா என கண்டறிந்து தெரிவிப்பதாக கூறி எங்கோ ஒரு மாவட்டத்திற்கு அழைத்து செல்வதாக தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி உள்ளிட்டோருக்கு தகவல்கள் கிடைத்தது.

இத னைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரின் அனுமதிபெற்று “ஸ்பெஷல் ஆப்ரேஷன்” தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இவர்கள் டிரைவராக வேலை பார்க்கும் புரோக்கர் தங்கமணி என்பவரது காரை ரகசியமாக பின் தொடர்ந்தனர். அவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 5 கர்ப்பிணிகளை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்றுள்ளனர்.

அந்த கார் பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள மெடிக்கல் ஷாப் முன்பு நின்றது. பின்னர் அழைத்து வந்த 5 கர்ப்பிணி பெண்கள் மெடிக்கல் ஷாப் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள் ளனர். பின் தொடர்ந்த ஸ்பெஷல் ஆபரேஷன் குழுவினர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது, கர்ப்பிணியை தரையில் படுக்க வைத்து, பழங்கால கருவியைகொண்டு சிசு சோதனை செய்வதை பார்த்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த நபர் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மங்களூர் கிராமம், கட்சி மேலூர் மேற்குதெருவை முருகன் (55) என தெரியவந்தது. இதையறிந்த மெடிக்கல் ஷாப்பில் இருந்த ஆண், பெண் இரு வரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இணை இயக்கு னர் டாக்டர் சாந்தி போலி பரிசோதகர் முருகனை மரு வத்தூர் போலீசில் ஒப்படைத்தார்.

The post கருவில் இருக்கும் சிசு பாலினம் கண்டறிய பெரம்பலூருக்கு அழைத்து வரப்பட்ட 5 கர்ப்பிணிகள் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Chisuvai Aana Pena ,Dharmapuri ,Krishnagiri Districts ,Bermalur ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...