×

சந்திரபாபுநாயுடுவுக்கு தோல் நோய் பாதிப்பு

திருமலை: திறன் மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினரும், தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைக்கு சந்திரபாபு நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரவி கிரண் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘சந்திரபாபுவுக்கு தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு உள்ளது. இதற்கான அறிக்கை நாளை(இன்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .என்.எச்.ஆர்.சி. அறிக்கையின்படி சிறைக்கு அவர் வந்தபோது அவரது எடை 66 கிலோ இருந்தது. அதன்பிறகு நேற்று எடை எடுத்ததில் 67 கிலோவாக உள்ளது ’ என்றார்.

The post சந்திரபாபுநாயுடுவுக்கு தோல் நோய் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Tirumala ,Former ,Chief Minister ,Andhra Pradesh ,Rajahmundry Jail ,
× RELATED ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா?...