×

கேரளாவில் பருவமழை தீவிரம் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 3 நாட்களுக்கு கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மே 30ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, எர்ணாகுளம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருச்சூர், மலப்புரம் உள்பட 5 மாவட்டங்களுக்கும் 9ம் தேதி கண்ணூர், காசர்கோடு உள்பட 4 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் பருவமழை தீவிரம் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Meteorological Center ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!