×

பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார்

திருமலை: பல நூறு கோடி முறைகேடு செய்துவிட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.  திருப்பதியில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் ஜனசேனா கட்சியின் திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் தலைமையில் கட்சியினர் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐஏஎஸ் அதிகாரியை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆதரவால் ஐடிஎப்எஸ் சேவை பிரிவில் இருந்த தர்மாவை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றம் செய்து கொண்டு வந்து தேவஸ்தான செயல் அதிகாரியாக நியமித்தனர். செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மா தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து துறையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஐந்தாண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே தப்பி செல்வதற்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் எந்த ஒரு அதிகாரிக்கும் விடுமுறை அளிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு விடுமுறை வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுவார்.  ஏழுமலையான் கோயிலில் நகை, பணம் கைமாறி இருப்பதாக சந்தேகம் உள்ளது. மேலும் ஐந்தாண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு போன்றவை வழக்குகளில் இருந்து தப்பி செல்ல அவர் முயற்சி மேற்கொள்கிறார்.

தவறு செய்து விட்டு தற்பொழுது அவர் வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொள்வதால் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும். தர்மாவை திருமலையை விட்டு வேறு எங்கும் செல்லாத வகையில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.  எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும் புதியதாக நியமிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்த பின்னர் தனது பொறுப்புகளை புதிய அதிகாரிக்கு ஒப்படைத்த பின்னரே செல்ல வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்று கொண்ட சிஐடி போலீசாரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

The post பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthan ,Janasena party ,Tirumala ,Executive Officer ,Tirupati ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை...