×

ஆந்திரா வயலில் பெண் கூலி தொழிலாளிக்கு கிடைத்த வைர கல்: ரூ.2 லட்சத்திற்கு வாங்கி சென்ற வியாபாரி

திருமலை: ஆந்திராவில் வயலுக்கு சென்றபோது பெண் கூலி தொழிலாளிக்கு வைர கல் கிடைத்தது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஜொன்னகிரி, துக்கலி, மட்டிகேரா, பகிடிரை, பேராவளி, மகாநந்தி, மகாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் வைர கற்கள் கிடைப்பது வழக்கம். இதற்காக மழை பெய்யும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அந்த பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்த பலர் வைர கற்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு ஜொன்னகிரியில் வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண் கூலித்தொழிலாளிக்கு நேற்று ஒரு வைர கல் கிடைத்தது. இதைகேட்ட கிராமத்தினர் திரண்டு வந்து வயல் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பெண் கூலி தொழிலாளிக்கு கிடைத்த வைர கல்லை வியாபாரி ஒருவர் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 கிராம் தங்கம் கொடுத்து வாங்கி சென்றார்.

The post ஆந்திரா வயலில் பெண் கூலி தொழிலாளிக்கு கிடைத்த வைர கல்: ரூ.2 லட்சத்திற்கு வாங்கி சென்ற வியாபாரி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirumala ,Andhra Pradesh ,Kurnool district ,Jonnagiri ,Dukkali ,Matikera ,Bagitrai ,Peravali ,Mahanandi ,Mahadevapuram ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...