×

அக்னிவீரர் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்: பாஜவுக்கு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாஜவின் கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கேசி தியாகி டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கேசி தியாகி, ‘‘பாஜவிற்கு ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனையற்ற ஆதரவு தருகின்றது. அக்னி வீரர் திட்டத்தில் வாக்காளர்களிடையே கோபம் உள்ளது.

எனவே அந்த திட்டத்தில் மக்களுக்கு ஆட்சேபனை உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கவில்லை. அது காலத்தின் கட்டாயம். நாங்கள் அதனை தொடர்வோம்” என்றார். லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானும், அக்னிவீரர் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளார்.

The post அக்னிவீரர் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்: பாஜவுக்கு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Allies ,BJP ,New Delhi ,United Janata Dal ,KC Tyagi ,Delhi ,KC ,Tyagi ,
× RELATED கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால்...