×

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 2018-ல் கேரளாவில் நிஃபா வைரஸ் பரவியபோது கொள்முதல் செய்யப்பட்ட மருந்து போதாது என்பதால் ஆஸி.யில் இருந்து கூடுதலாக மோனோகுளோளல் ஆண்டிபாடி மருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆறு பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ணியில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 1,080 பேருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மலப்பூர், வயநாடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய இடங்களில் இந்த நிஃபா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 24 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2018-ல் கேரளாவில் நிஃபா வைரஸ் பரவியபோது கொள்முதல் செய்யப்பட்ட மோனோகுளோளல் ஆண்டிபாடி மருந்து போதாது என்பதால் ஆஸி.யில் இருந்து கூடுதலாக மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

The post கேரளாவில் நிஃபா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Australia ,Kerala ,Delhi ,Dinakaran ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...