- கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்
- எம்.ஜி.ஆர்
- மருத்துவ பல்கலைக்கழகம்
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- டாக்டர்
- எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
- எம் சுப்பிரமணியன்
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு, சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் மூலம் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்வரால் கடந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1822 மருத்துவமனைகள் பயன்பெறுகின்றன. தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உள்ள 1.43 கோடி குடும்பங்களுக்குள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார, சாதி வாரியாக 86,48,748 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவத்துறையின் அடுத்த கட்டமாக மருத்துவ ஆராய்ச்சி மையம் சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
அந்த வகையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்கின்ற பெயரில் புதிய கட்டிடம் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து, திட்டப் பணிகள் மற்றும் வரைபடப் பணிகள் பொதுப் பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்து, ஒப்பந்த பணிகள் தொடங்கப்பட்டும். இதற்கு தமிழ்நாடு முதலவர் அடிக்கல் நாட்டப்பட உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்ஜிஆர் மருத்துவ பல்கலை வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.
