×

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மறுப்பு ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மாணவியின் தந்தை நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். பின்பு அந்த பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளிக்கும் போது, “நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

மசோதாவுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தால், நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கண்டிப்பாக கையெழுத்து இட மாட்டேன்” என்றார். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற்றப் பட வேண்டும். ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை ம.தி.மு.க. நடத்தி வருகின்றது.

The post நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மறுப்பு ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu ,Vaigo ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,House ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...