×

கார் விபத்தில் பொன்.மாணிக்கவேல் உயிர் தப்பினார்

திண்டிவனம்: சென்னையில் இருந்து திருச்சிக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் சிறப்பு அதிகாரி(டிஐஜி) பொன்.மாணிக்கவேல், காரில் சென்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து மெதுவாக சென்ற வேன் மீது பொன்.மாணிக்கவேலின் கார் உரசியது. இதில் காரின் பக்கவாட்டில் மட்டுமே சேதமடைந்த நிலையில், எந்தவித காயமும் இன்றி பொன்.மாணிக்கவேல் உயிர் தப்பினார். இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கார் விபத்தில் பொன்.மாணிக்கவேல் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Pon. Manikavel ,DIG ,Anti-Idol Smuggling Unit ,Trichy ,Chennai ,Villupuram ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...