×

என்எல்சி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கிராம மக்கள் பாராட்டு

சேத்தியாத்தோப்பு, ஜூன் 23: ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்த ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் என்எல்சி நிர்வாகத்துக்கு ஏழு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத்துக்கு சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், சாத்தபாடி, ஊ.ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட 7 கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து இழப்பீடு குறைவாக இருப்பதாகவும், ஏக்கருக்கு ரூ. 25 லட்சம் தர விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. கிராம மக்கள் இணைந்து என்எல்சி மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு வளையமாதேவி கிராமத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தினர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கிராமத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநில அரசின் ஒத்துழைப்போடு மத்திய அரசு இந்த இழப்பீட்டு தொகையை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இது 15 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, மாற்று குடியிருப்புக்கான இடம், 1200 சதுர அடியில் வீடு, தகுதி அடிப்படையில் நிரந்தர பணி வழங்கபடுவதாக என்எல்சி உறுதியளித்திருக்கிறது. போராட்டத்தை விலக்கி கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற காரணமாக இருந்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. வீடு, மனை குடியிருப்போர் சங்க தலைவர் கலியமூர்த்தி, சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post என்எல்சி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கிராம மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : NLC ,Union ,State Govt. ,Chetiathoppu ,State Governments ,Dinakaran ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி