- குன்றத்தூர் ஊராட்சி
- யூனியன்
- அமைச்சர் தமோ அன்பரசன்
- காஞ்சிபுரம்
- குன்ரத்தூர்
- பஞ்சாயத்து
- குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- தின மலர்
காஞ்சிபுரம் ஜூன் 19: குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ரூ.3 கோடியே, 26 லட்சத்து, 77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 கட்டிடங்களை நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற எம்பி தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-22, கீழ் 2ம் கட்டளை ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளையும், கோவூர் ஊராட்சியில் ரூ.15 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் குமரன் நகரில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-22 தண்டலம் ஊராட்சியில் ரூ.90 லட்சத்தில் மதிப்பீட்டில் மணிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தினை திறந்து வைத்தார். மேலும், தண்டலம், கோவூர் மற்றும் பெரியபணிச்சேரி ஊராட்சிகளில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தொட்டியையும், ரூ.5 லட்சத்து, 24 ஆயிரம் மதிப்பீட்டில் கொளப்பாக்கம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும், பரணிபுத்தூர் ஊராட்சியில் ரூ.15 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பரணிபுத்தூர் ஊராட்சியில் ரூ.18 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரை தளம் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 கீழ் ரூ.26 லட்சத்து 60 ஆயிர் மதிப்பீட்டில் பெரியபணிச்சேரி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23 கீழ் பரணிபுத்தூர் ஊராட்சியில் ரூ.13 லட்சத்து, 57 ஆயிர் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், சரவணகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
The post குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.26 கோடியில் அரசு கட்டிடங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.