×

ஒரே நாளில் 9,355 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாட்டில் மேலும் 9,355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 24 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 12,932 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 35 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை 5,31,424 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

The post ஒரே நாளில் 9,355 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Health Department ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...