×

குழந்தைகள் பாலியல் குற்றங்களை விசாரிக்க திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம்

குழந்தைகள் பாலியல் குற்றங்களை விசாரிக்க திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப் பேரவையில் அறிவித்தார். சட்டப் பேரவையில், நீதி நிர்வாகம் மற்றும் சிறைகள் சீர்திருத்தப்பணிகள், சட்டத் துறையின் மானியக் கோரிக்கையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, இறுதியில் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
நீதி நிர்வாகம்:

  • பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை விசாரிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக மாவட்ட நீதிபதி பதவி நிலையில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை ஆயத்தில் உள்ள வழக்குரைஞர்கள், அவர்களின் எழுத்தர்கள் மற்றும் வழக்கு தொடுத்த பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள மின்னணு காட்சிப் பலகைகளுக்கு பதிலாக புதிய மின்னணு காட்சிப் பலகைகள் ரூ.2 கோடியே 7 லட்சத்து 37 ஆயிரத்து 321 செலவில் வாங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள 1008 சார்நிலை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் உபகரணங்கள் ரூ.80 கோடியில் வாங்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்படும்.

சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள்:

  • சிறைவாசிகள் கல்வி மேம்பாட்டுக்காகவும், வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறை, பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள சிறை நூலகங்கள் ரூ208. 74 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
  • அனைத்த மத்திய சிறைகள் மற்றும் தனிக் கிளைச் சிறை, பூந்தமல்லி ஆகிய சிறைகளுக்கு 13 நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான் கருவிகள் ரூ. 325 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
  • அனைத்து மத்திய சிறைகளுக்கும் மின்னணு தொழில் நுட்பத்துடன் கூடிய 450 டிஜிட்டல் மொபைல் ரேடியோ வாக்கி-டாக்கி மற்றும் 15 ரிப்பீட்டர் செட்டுகள் ரூ3 கோடி செலவில் வாங்கப்படும்.
    *சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு Freedom என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் இனிமேல் தமிழ்நாடு காவலர் அங்காடியிலும் விற்பனை செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

சட்டத்துறை:

  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக நூலகத்துக்கு கூடுதலாக சட்டப்புத்தகங்கள் வாங்க ரூ.65 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படும்.
  • அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளியில் இளநிலை சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழக்காடுதல் கலை என்ற தலைப்பில் பயிற்சி அளிக்்க ரூ.32 லட்சத்து 25ஆயிரம் நிதி ஒதுக்கப்படும். இதன்படி ஒரு சட்டக் கல்லூரிக்கு 30 மாணவர்கள் வீதம் 15 கல்லூரிகளை சேர்ந்த 450 மாணவர்கள் பங்கு பெறுவார்கள்.

The post குழந்தைகள் பாலியல் குற்றங்களை விசாரிக்க திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Law Minister ,Raghupathi ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...