×

ஆன்லைனில் ஆர்டர் செய்து நகை மோசடி: அந்தமான் ஆசாமி கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடையில்  ஆன்லைன் மூலம் 9 சவரன் நகைகளை ஆர்டர் செய்து,  நூதன மோடியில் ஈடுபட்ட சர்தாக் ராவ் பாப்ராஸ் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்தமானை சேர்ந்த இவர், சென்னையில் பல்வேறு பகுதிகளில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள பிரபல நகைக்கடைகளில் ஆன்லைன் மூலமாக நகைகள் ஆர்டர் செய்து, அவற்றை கொண்டு வரும் ஊழியர்களிடம் நூதன முறையில் திருடி, அந்த நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்தது தெரியவந்தது.  அவரிடம் இருந்து 7.5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். …

The post ஆன்லைனில் ஆர்டர் செய்து நகை மோசடி: அந்தமான் ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Andaman ,CHENNAI ,Savaran ,Annanagar, Chennai ,Nuthana Modi ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது