×

ஈரல் பலாக்காய் சுக்கா

தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் 250 கிராம்
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
இளம் பலாக்காய் 2 கப் (சிறு துண்டுகள்)
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
உப்பு சிறிதளவு
சின்ன வெங்காயம் 15
தக்காளி 1
கருவேப்பிலை 1 கொத்து
பச்சை மிளகாய் 2
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு ½ டீஸ்பூன்
மல்லித்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பலாக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைவேக்காடு வரை வேகவைக்கவும். ஈரலை நன்றாக கழுவி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், மிளகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் ஈரலை போட்டு 57 நிமிடம் வேகவைத்து பலாக்காயை சேர்த்து கலக்கவும். மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான ஈரல் பலாக்காய் சுக்கா தயார்.

மருத்துவப் பயன்கள்:
ஈரல் இரும்புச்சத்து அதிகம் கொண்டதால் ரத்த சோகைக்கு உதவும்.
Vitamin A மற்றும் B12 நிறைந்ததால் உடல் சக்தி அதிகரிக்கும்.
பலாக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டதால் ஜீரணத்திற்கு நல்லது.
நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைவாக வைத்திருக்க உதவும்.
மிளகு மற்றும் சீரகம் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
உடல் பலவீனம் உள்ளவர்களுக்கு சத்தான உணவாக பயன்படும்.
– ஹேமலதா வாசுதேவன்

Tags :
× RELATED குடைமிளகாய் குருமா