×

முள்ளு முருங்கை இலை அடை

தேவையானவை:

*இட்லி அரிசி- 1 கப்
*உளுந்து – கால் கப்
*முள்ளு முருங்கை இலை – 20
*ஜீரகம் – 1 தேக்கரண்டி
*மிளகு – 20
*உப்பு – தேவைக்கேற்ப
*எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு முருங்கை இலையை நடுவில் உள்ள நரம்பை நீக்கி விட்டு, சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து வைக்கவும். பின்னர், ஊறிய அரிசி, முள்ளு முருங்கை இலை, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துக் கெட்டியான தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். பின்னர், தோசைக் கல்லில் சின்ன சின்ன அடைகளாக ஊற்றி எடுத்தால் இரண்டு பக்கமும் நல்ல சிவக்க சுட்டு எடுத்தால் முள்ளு முருங்கை இலை அடை தயார்.

பலன்கள்:

முள்ளு முருங்கை இலையில் சுண்ணாம்புச் சத்து, நார்சத்து, இரும்பு சத்து அதிகம் உள்ளது. மாதவிடாயின் போது உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு.

Tags :
× RELATED குடைமிளகாய் குருமா