×

பலாப்பழ பொட்டுக்கடலை அடை

தேவையான பொருட்கள்:

*பலாப்பழ சுளை 15
*அரிசி மாவு 1 கப்
*வெல்லம் ¾ கப்
*ஏலக்காய் 3
*போட்டுக்கடலை மாவு – 1/2 கப்
*தேங்காய் துருவல் ¼ கப்
*நெய் தேவைக்கேற்ப.

செய்முறை:

*பலாப்பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். மேலும், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு ஏலக்காய் தூள், தேங்காய் சேர்த்து கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி அடை போல *ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான பலாப்பழத்தின் மருத்துவ பயன்கள்.
*பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
*இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடலுக்கு விரைவான ஆற்றலை தருகிறது.
*வைட்டமின் C நிறைந்ததால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.
*பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
*கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
*ஆண்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் இருப்பதால் தோல் பொலிவை மேம்படுத்த உதவும்.
*வைட்டமின் A இருப்பதால் பார்வைத் திறனை பாதுகாக்க உதவுகிறது.

பொட்டுக்கடலையின் மருத்துவப் பயன்கள்:

*உடல் வளர்ச்சி மற்றும் தசை வலிமைக்கு உதவும்.
*நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.
*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.
*மெதுவாக ஜீரணமாகும் தன்மை காரணமாக ரத்த சர்க்கரை அளவு திடீர் உயர்வை குறைக்க உதவும்.
*குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் டயட் உணவாக பயன்படுத்தலாம்.
*கெட்ட கொழுப்பை குறைக்க உதவி செய்து இதய நலனை பாதுகாக்கும்.
*இரும்புச்சத்து இருப்பதால் hemoglobin அளவை மேம்படுத்த உதவும்.
*எளிதில் ஜீரணமாகும் மற்றும் உடலுக்கு பலம் தரும் ஆரோக்கியமான சிற்றுண்டி.
– ஹேமலதா வாசுதேவன்

Tags :
× RELATED குடைமிளகாய் குருமா