தேவையானவை:
வல்லாரைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்,
காய்ந்த மிளகாய் – 1,
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
புளி – நெல்லிக்காய் அளவு,
தேங்காய் துருவல் – 1 சிறிய கப் அளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஐந்து டீஸ்பூன்.
செய்முறை:
வல்லாரைக் கீரையை ஆய்ந்து நீரில் அலசவும். இஞ்சி, வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கீரை, பூண்டு போட்டு வதக்கவும். இஞ்சி, வெங்காயத்தை இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். சுவையான துவையல் தயார். ஞாபக சக்தி அதிகரிக்கச் செய்யும்.
